அன்பென்றாலே அம்மா - கற்குவேல் பா

இரத்தத்தில்
குளுக்கோஸ் அளவு
குறையவே ..
அமில அளவை
வயிற்றுச் சுரப்பிகள் அதிகரித்து ,
காஸ்ட்ரின் ஹார்மோன்
தூண்டப்பட்டு ,
" பசி "
என்றதோர் உணர்வு - மூளையை
எட்டும் முன்னரே ;
" சாப்பிட வாயா " என்று
தட்டில் ,
சோறோடு வருபவள்
" தாய் " !!!
அறிவியல்
எட்ட முடியாத உயரங்களில் ,
அவளது அன்பும் !!
#அன்பென்றாலே_அம்மா
#கற்குவேல்_பா