கோக்குமாக்கூ

என்னிடமிருந்த கூடுதலான செருப்பை
இல்லாதவனை அழைத்துக் கொடுத்துவிட்டார்
கோவில் வாசலில் கடவுள்.
******

அலமாரியில் பட்டுச் சேலைகளுக்கு
உச்சவரம்பு வேண்டும் -
பொருளாதாரச் சீர்திருத்தம்.
******

மனைவிகள் நம்பும் வரை
பொய்யாகவே இருக்கின்றன
நம் உண்மைகள்.
******

மன்னிக்கவுமில்லை
மறக்கவுமில்லை நீ -
என்ன செய்ய என் தவறுகளை?
******

ஒரே நாக்கில் சுரக்கிறது
இரண்டு உமிழ்நீர்
ஏற்கவும் வெறுக்கவும்.

…..ஆண்டன் பெனி.

எழுதியவர் : ஆண்டன் பெனி (25-Dec-15, 10:49 am)
பார்வை : 114

மேலே