நத்தார் வாழ்த்துக்கள்

பாலன் பிறந்த
நாளில் பாவங்கள்
தொலையட்டும்.....
அவன்
பாதங்கள்
பட்ட இப்பூமி
சிறக்கட்டும்.....!
இயற்கையின்
சீற்றத்தில்
சீரழிந்த
நிலை கவலைதான்
இருந்தாலும்
சீக்கிரமே
கடந்து போகட்டும்....!
ஐம்பூதங்களில்
ஓன்று
எங்கோ ஒருமூலையில்
கோபம் கொள்ளுது.....!
உயிர்களை தினமும்
கொல்லுது.....!
அமைதியும்
சாந்தியும்
அடுத்தாண்டு
என்றாலும்
எமக்கெல்லாம்
கிடைக்கட்டும்....!
புதிய வாழ்க்கை
வாழ
வாழ்ந்த வாழ்க்கையை
மறந்து
நாமும்
மறந்தே போகாமல்
வாழ்ந்தே
போவோம்.....!
நண்பர்கள்
அனைவர்க்கும்
இனிய நத்தார் தின
வாழ்த்துக்கள்.....!
நட்புடன்
Thampu