நட்பின் துணை

கூடப் பொறந்தவங்க கூட இருந்தாலும்
கூட வரவே மறப்பாங்க. - கூடவேக்
கூடாது என்றுரைத்தக் கூட்டாளி தானென்றும்
கூட வருவான் துணைக்கு.

தந்தை வெறுத்தாலும் தாயார் தடுத்தாலும்
சொந்தம் எனவந்த சுந்தரியாள் - சிந்தை
அவன்பக்கம் கூடாது என்றாலும் விட்டு
கவனத்தில் வைநட்பைக் காத்து!

தோள்கொடுக்கும் தோழன் துணைநிற்கும் நெஞ்சத்தை
தேள்கூடக் கொட்டத் தயங்கும்பார். - வாள்கொண்ட
கூர்மை வளங்கொண்ட நட்பின்முன் நிற்கின்றக்
கூர்மை தகர்க்கும் பகை.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Dec-15, 1:57 am)
பார்வை : 529

மேலே