நண்பனின் பிறந்தநாள் வாழ்த்துக்கவி

நட்பின் இலக்கணமே நண்பா
உன்னிடம் தோற்று ஓடும்
தமிழ் இலக்கண வெண்பா

உன் மனதையும்
என் மனதையும்
சேர்த்து மாலை செய்த
பூ நட்பு

அண்ணனாகப் பிறக்கமுடியவில்லை என்றா
அந்நிய வீட்டில் பிறந்து நண்பனானாய் ?

நீயும் நானும்
நீலமும் வானும்
பூவும் தேனும்

உயரத்தில் வாள் எடுத்த
சோழன் அல்ல நீ
என் துயரத்தில் தோள் கொடுத்த
தோழன்

உறவெனும் சட்டமன்றத்தில்
வெளிநடப்பு செய்யாத பூ
உன் நட்பு

செஞ்சோற்றுக்கடன் தீர்க்க
கர்ணன் துரியனிடம்
எஞ்சோற்றுக்கடன் தீர்க்க
நீ நட்புகொண்டாய்
இந்த வரியோனிடம் ?

நண்பா
உண்பதைப் பாதி கொடுத்தாய்
அன்பதை மீதி கொடுத்தாய்
என்பகை நின்று தடுத்தாய்
அம்பதை சென்று தொடுத்தாய்

எனக்காகப் பிறக்கவில்லை
நீ எனைக்காக்கப் பிறந்தாய்
துயரில் தூக்கப் பிறந்தாய்
உயரம் ஏற்றப்பிறந்தாய்

என்னோடு இணைந்த நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : நட்பு (24-Dec-15, 3:57 pm)
பார்வை : 1193

மேலே