உலகம் அழிய வேண்டும்

கற்பனை ....!


உலகம் அழிய வேண்டும் ...உயிர்களுக்கு எவ்வித சேதமும் இன்றி ...!
பொன் , பொருள் , பணம் எல்லாம் அழிய வேண்டும்...

கற்பனை செய்து கொள்ளுங்கள்!

பசிக்கு ?
ஆதி மனிதன் நிலத்தை தோண்டினான் அவனுக்கு கிழங்கு கிடைத்தது ....!
நாதி யற்ற நவீன மனிதா நீ தோண்டினால் பாலிதீன் பைகள் தான் கிடைக்கும் ....!

மலைகளில் தேன் எடுப்பதற்கு அவன் தேன் கூட்டினை தேடினான் ....!
நீயோ அந்த மலையையே தேடிக்கொண்டு இருப்பாய்....!

கற்குவாரி வைத்து தகர்த்ததே நீதானே ..!

ஆதி மனிதனோ மரத்தின் நிழலில் இளைப்பாறினான் ...!
நீயோ உந்தன் நிழலிலேயே இளைப்பாற வேண்டிய சூழல் வரும் ...!

அவனோ ஆற்றில் நீர் அருந்தினான் ...!
உனக்கோ நீர் நிலைகளில் நீ கலந்த தொழிற்சாலை கழிவுகள் தயாராக உள்ளது ....!

இந்த நிலை மாறுவதற்குள் .நாம் மாறவேண்டும்....!
இல்லையேல் ஒருநாள் இயற்கைக்கு
பதில் சொல்லியே தீரவேண்டும்.....!

எழுதியவர் : premkumar (25-Dec-15, 3:20 pm)
சேர்த்தது : பிரேம்குமார்
Tanglish : ulakam aliya vENtum
பார்வை : 90

மேலே