சாரல்

மேகங்களின் சண்டையில் கோபம் கொண்டு
பூபி வந்த மழை துளிகள்
நான் வீட்டிற்குள் அழைக்காததால்
என் வீட்டு வாசலை மட்டும் தொட்டு சென்றது

மழையின் நினைவில் கதவை அடைத்து ஜன்னலை திறந்தேன்
மழையின் குழந்தை மழலையாய் என்னை கொஞ்சியது

கைகளை மட்டும் நீட்டினேன்
என்னை பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
ஜில்லென்ற சாரல் சிலிர்க்க வைத்தது என்னை

மழை நின்று பல மணி நேரமாகி கூட தாயை தேடாமல்
வீசிக்கொண்டே இருக்கிறது சாரல்

மழையும் அழகு மழையின் சாரலும் அழகு
காத்துக்கொண்டே இருக்கிறேன் மழை பெய்யும் போது
என் வீட்டு ஜன்னலோர சாரலுக்காக...........

எழுதியவர் : கார்த்திகா (25-Dec-15, 3:53 pm)
Tanglish : saaral
பார்வை : 179

மேலே