குருவி 1 - ஆனந்தி

காலைக்கு பிந்தைய 
பொழுதுகளில் கீச் கீச் 
என்ற இசையை நிரப்பி,
இன்முகம் காட்டி 
நளினமான நர்த்தனத்தோடு,
என் கணத்தை களவாடும் 
குருவி ஒன்று ..........

பரிச்சியத்தால் வந்ததும்
நெருங்கும் என்னிடம். 
முதலில் காலை வணக்கம் 
சொல்லி அதன் அன்பை 
ஆக்ரமித்திடும்...........

சில நேரம் பற்களை காட்டிய படி 
வம்புக்கு இழுக்கும்............

சில நாட்களில் வாய்கொள்ளா, கனிகளை 
கொணர்ந்திடும் எனக்காய்........

நான் சொல்ல துவங்கும் முன் 
ஏதும் பிரச்சனையா என 
லாவகமாய் புரிந்தபடி கேட்டிடும்.......

யாருமற்ற வேளைகளில் சில 
நேரங்களில் அக்கறையாய் 
அரசியலும் பேசுவோம்.....

இப்படி ஏதாவது ஒன்றை 
கதைத்திருப்போம் தினம் 
தினம் .......

பின், குறிப்பிட்ட நேரத்தில் 
நிச்சயம் நாளை வருகிறேன் 
என உறுதி சொல்லி கிளம்பிவிடும் ......

அதன் ஆனந்த சிறகசைப்பில் 
நானும் ஆனந்தத்தில் 
முழ்கி கிடப்பேன் குருவி சென்றும்,
வெகு நேரம் வரை ........

எழுதியவர் : ஆனந்தி.ரா (24-Dec-15, 2:09 pm)
பார்வை : 161

மேலே