மர்ம சப்தங்கள் கடைசி அத்தியாயம்
குழப்பத்தோடு வீட்டிற்கு வந்த சதீஷ் வீட்டின் கதவை திறந்து அவன் கண்டு பிடித்த அந்த கருவியை மேசை மேல வைத்து அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சப்தம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் ஒரு மயான அமைதி வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தது. அவன் எழுந்து போய் தனது வீட்டில் உள்ள குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து குளிர்ந்த நீரை குடித்தான் அவன் குடிக்கும் சப்தம் தண்டோரா சப்தம் போல வீட்டையே அதிரச் செய்து கொண்டிருப்பதை சதீஷ் உணர்ந்தான்.
அவனது அந்த ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எதோ ஒரு துணிச்சல் அவனுக்கு வந்தது.அந்த துணிச்சலோடு சதீஷ் தன்னுடைய கண்டு பிடிப்பை எடுத்து வீட்டிற்குள் தன் காதில் மாட்டி அதனை இயக்கினான்.
வீட்டிற்குள் டக்...... டக்......... டக்...... என்ற சப்தம் அவன் காதில் கேட்டது.அந்த சப்தம் கேட்ட பக்கம் மெதுவாகத் திரும்பி நடந்தான் அங்கே பல்லி கண்ணாடி ஜன்னலின் மீது நடந்து கொண்டிருந்தது.
பிறகு அவனது வீட்டின் தோட்டத்திற்குள் சென்றான்.அங்கே அவனது கண்டுபிடிப்பை அவனது காதில் மாட்டினான். எந்த சப்தமும் கேட்க்கவில்லை.
அவனது அந்த கருவியில் இன்னும் டெசிபெல் அளவை குறைத்தான்.அவனுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை. அவன் யூகித்தது தவறோ என்று எண்ண ஆரம்பித்தான் ஒருவேளை அந்த மர்ம சப்தம் பேயின் சப்தம் தானா என்று அவனுக்குள் கேட்க ஆரம்பித்தான்.
அப்பொழுது அவன் அருகில் இருந்த மரத்தின் இலையைக் கிள்ளி எறிந்தான், மீண்டும் அந்த அலறல் சப்தத்தைக் கேட்டான். இன்னொரு இலையைக் கிள்ளி எறிந்தான் அப்பொழுது மீண்டும் அதே அலறல் சப்தம்.
அவனுக்கு இப்பொழுது புரியத் தொடங்கியது இறந்தவர்களின் ஆவி அல்ல அந்த அலறல்களை உருவாக்குவது உயிரோடு இருக்கும் மரம்தானென்று. அதன் இலையை கிள்ளி எறிந்ததால் வேதனையில் அவை அலறுகிறது என்பதைக் கண்டுபிடித்தான்.
இப்பொழுது அவனுக்குப் புரிந்தது செண்பகதோப்பிலும் கேட்ட அலறல் சப்தம் அந்த மரத்தின் கீழ் உள்ள புற்களை மிதிக்கும்பொழுது அவை எழுப்பின சப்தங்களென்று!
------------ முற்றும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
