நடிப்பு

அந்த ரயில் இன்னும் மூன்று நிறுத்தத்திற்குப் பிறகு உள்ள சந்திப்பில் தனது பயணத்தை முடித்துக்கொள்ள இருந்தது.
இன்ச்பெக்ட்டர் உடையில் மிடுக்காக இருந்த குமார் ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயில் மெல்ல நகரத்தொடங்கியது. பல பெட்டிகளில் ஒருசிலரே இருந்தனர்.
அவரது கண் லேடீஸ் கம்பர்ட்மென்ட் மீது விழுந்தது. அதில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்ததார்.
அவளை நோக்கி இரண்டு ஆண்கள் நெருங்குவது தெரிந்தது. ஒருவன் கையில் கத்தி இருந்தது. மற்றவன் கத்திப் பேசினான். அப் பெண்ணின் தடுமாறும் வார்த்தைகளில் இருந்து அவளது கெஞ்சலையும் பயத்தையும் குமாரால் உணரமுடிந்தது. “கத்தி பேசின என் கத்தி பேசும்” என்ற வார்த்தைகள் குமாரின் காதில் விழுந்ததுதான் தாமதம் குமார் அனிச்சையாக செயல் பட ஆரம்பித்தார் “டேய் எவண்டா அவன்” என்று கூஇச்சல் இட்டவாறே அந்த கம்பர்ட்மென்ட்குள் நுழைந்தார்.அவரைக் கண்டதும் அடுத்த வாசர்ப்படி வழியாக ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் பயந்து ஓடும் சத்தத்தைக் கேட்ட அந்தப் பெண் தனது இரு கைகளாலும் தனது முகத்தை மூ டிக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். மெல்ல கண்களைத்திறந்து பார்த்தாள். “டேய் குமார் இது என்ன வேஷம்” என்றாள்.
அது அவனது பள்ளி தமிழ் ஆசிரியை.
“எங்க காலேஜ்ல கல்சுரல் டே நேரம் ஆனதால ட்ரைன்ல வந்து டிரஸ் மாத்திக்கலாம்ன்னு வேகமா வந்திட்டேன்” என்றான் குமார்.
இருவருக்கும் ஒரேமாதிரியான வியப்பு
“என்ன டீச்சர் நாங்க படிக்கும் போது முந்தானையை இடுப்பில் சொருகி ஜான்சிராணி கட்ட பொம்மன் மாதிரியெல்லாம் வீரமா வசம் பேசி நடிச்சு காண்பிப்பீங்க ஸ்கூல் ல போல்டா எல்லோர்கிட்டேயும் பேசுவீங்க. அந்த வீரம் இப்போ எங்கப் போச்சு டீச்சர். என்னால நம்பவே முடியல நீங்களா இப்படி ....உங்க நடிப்பை மிஞ்சின என்னோட நடிப்பைப் பார்த்திர்களா? என்றான். டிரைன் இருவரும் இறங்கினார்கள்.

எழுதியவர் : (26-Dec-15, 11:36 am)
சேர்த்தது : rajkavi
Tanglish : nadippu
பார்வை : 109

மேலே