மழைச் சிரிப்புகள்

சி . அருள் ஜோசப் ராஜ்
1 “மழை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்குன்னு எப்படி சொல்றீங்க!”
“மழை இருக்கவேண்டிய இடத்துல மக்களும் மக்கள் இருக்க வேண்டிய இடத்துல
மழையும் இருக்கறதை வச்சுதான்”

2. “ மழை பசங்க புத்தகத்தை வாரிகிட்டு போயிருக்கே ஏன்?
“எல்லாம் நமக்கு பாடம் கத்துக்குடுக்கத்தான்”

3. “தலைவரை ஏன் அடிக்கப் போறாங்க”
“அவனவன் படுற அவஸ்தையில நாங்க மழையை வீட்டுக்கே கொண்டுவந்திட்டோம் சந்தோஷமான்னு கேட்டாராம்”

4. “தலைவர் கோபமா அப்படி என்ன கேட்டாரு?
“நீங்க வான்னா வரதுக்கும் போன்னா போகரத்க்கும் நான் என்ன மழையான்னு கேக்கறாரு”

5. “மழை வெள்ளம் சமயத்துல பொறந்துதே அந்த குழந்தைக்கு என்ன பேர் வச்சீங்க”
“மழை முகில்”

6. “அடுக்கு மாடி குடியிருப்பு கட்டினா மேல் தளத்தில லைப் போட்டும் வைக்கணும்னு ஏன் சொல்றாங்க”
“மழை வெள்ளத்துக்கு பயன்படும்னுதான்”

7. “லோ வில்லா ஹை வில்லான்றான்களே அது என்ன?
“வெள்ளம் வந்தா முதல் தளம் வரை தண்ணி நிக்கனுமா இல்ல இரண்டாவது தளம்
வரைக்குமான்றதுக்காக சொல்றதுதான்”




8. “மழை வெள்ளத்துக்குப் பிறகு உங்க குடியிருப்போர் சங்கத்துல கூடி என்ன முடிவு
எடுத்திருக்கீங்க”
“குடிருப்பவங்க எல்லோருக்கும் நீச்சல் பயிற்சியும் படகு ஓட்டவும் கத்துக் கொடுக்கனுன்னு”

9. “மழை பாதிப்பு சந்தோஷமா இருந்துதுன்னு சொல்றீங்களே நீங்க என்ன .......”
“சிலு சிலு காத்து சமைக்காம சாப்பாடு கரண்ட்டு இல்லாம மெழுகு வர்த்தி வெளிச்சத்துல விடிய விடிய எல்லோரும் கதைப் பேசிகிட்டு இருந்தோமே இதை விட......”

10. “நான் ஊருக்கு புதுசு உரகடம் எங்கயிருக்கு”
“அது தண்ணீலதான் இருக்கு”

11. “ரோட்டுல தண்ணி ஜாமாகி நிக்கறதுக்கு யார்தான் காரணம்?
“அந்த டிராபிக் இன்ஸ்பெக்டர்தான்”

12. “தண்ணி வேணும் தண்ணி வேணுன்னு சொன்னவங்க இப்போ என்ன சொல்றாங்க “
“தண்ணி வந்திடுச்சி தண்ணி வந்திடுச்சின்னு சொல்றாங்க”

13. “மழை சமத்துவத்தை உண்டாக்கிடுசின்னு எதவச்சு சொல்றீங்க”
“ஆசாரம் பாத்தவரை அப்துல்லா அலேக்கா தூக்கிக்கிட்டு வர அந்தோணி சமைச்சதை
சாப்பிடுறாரே அதை வச்சுதான்”

14.“வெள்ளத்தைப் பார்வையிட்ட தலைவர் என்ன சொன்னார்? “
“மழையால நிலத்தடி நீர்மட்டம் மட்டுமல்ல நிலத்திலையும் நீர் மட்டம்
உயர்ந்திருக்குன்னு சொன்னார்.

எழுதியவர் : (26-Dec-15, 11:27 am)
சேர்த்தது : rajkavi
பார்வை : 87

மேலே