கூடுதான் வந்திடும் நாளுமே ---- கட்டளைக் கலிப்பா

தேடிச் சோறினை நித்தமும் தின்றிடத்
------ தேகம் கூடிட எங்கிலும் மூப்பினை
வாடி ஏற்றிடப் பின்னரும் மண்ணிடம்
------- வாட வைத்துமே மக்களும் நம்முடன்
கூடி வந்தவர் கூடவே வந்தரோ?
------- கூட கூடுதான் வந்திடும் நாளுமே
ஓடி நிற்பதும் ஓலமும் வைப்பதும்
------- ஓங்கித் தீயுனுள் தங்கிடல் கூடுமோ ?


வாய்ப்பாடு :-

தேமா கூவிளம் கூவிளம் கூவிளம்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Dec-15, 12:59 pm)
பார்வை : 55

மேலே