வருக வருக புதுவருடமே

..............புத்தம் புது வருடமே வருக............
...சிறப்புகள் தந்திட புது வருடமே வருக...
...மாண்டவர் எல்லாம் மோட்சம் பெருக...
....வாழ்பவர் எல்லாம் நல்லருள் பெருக...

...ஜனனங்கள் எல்லாம் சிறப்புடன் வருக..
..இயற்கையின் சீற்றம் தவிர்த்திட வருக..
.....தீயவை அனைத்தும் திருந்திட வருக...
.......நல்லவை எல்லாம் பெருகிட வருக.....

.....நற்கல்வி எண்ணம் மலர்ந்திட வருக.......
........ஏழையின் கல்வி பெருகிட வருக...........
.........வியாபார கல்வி ஒழிந்திட வருக...........
......கல்வியால் உலகம் ஒளிர்ந்திட வருக......

......வாழ்வின் அர்த்தம் உணர்த்திட வருக.....
.....வார்த்தையின் தாக்கம் புரிந்திட வருக.....
......அணுகுண்டு ஆயுதம் ஒழிந்திட வருக......
.......அன்பெனும் ஆயுதம் பெருகிட வருக......

.........அகராதி,அகதிகள் ஒழித்திட வருக........
.அனாதைகள் மறுகிடும் ஆண்டினை தருக...
..பட்டினி பஞ்சம் நீங்கிட செழிப்புடன் வருக...
......ஜாதிகள் மறுகிட புதுவருடமே வருக.......


வருக வருக புதுவருடமே

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (29-Dec-15, 1:16 pm)
பார்வை : 151

மேலே