வாசம் வீசிடும் மலர்கள் ----- கட்டளைக் கலிப்பா

மலரின் வாசனை மண்ணிலே மாற்றிடல்
------ மணத்தை நீக்கிடல் நல்லதோ சொல்கவே .
பலரின் கைப்படச் சிந்திடும் பூவினம்
------ பசுமை மாறிடல் பச்சிலை நோகுதல்
சிலரின் கண்படப் பக்குவம் போகிடல்
------ சிதறும் பூக்களின் மாட்சிமை மாறிடும் .
நலத்தைப் போற்றிட நல்லதோர் வண்ணமும்
------- நவில்வேன் தந்திடும் வாசமும் வீசுமே .


வாய்ப்பாடு :_

புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம் ( அரையடிக்கு )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Dec-15, 1:28 pm)
பார்வை : 66

மேலே