ட
உணர்த்தல் பின்னொரு
உவகை...
நிறைத்தல் யாதுமே
நூதனம்...
அறுபட அறுபட
விடைபெற தவிக்கும்
மடை திற படை திற
ஊன் உடல் பிழைக்கும்
விடு பட வழி விட
கான் மலை சிலிர்க்கும்
பட பட கட கட
தேன் மழை தெளிக்கும்
நட நட மட மட
வான்வெளி துளிர்க்கும்
சுட சுட விட விட
தன் முனை சலிக்கும்
விட விட விட்டு விட
வேண்டுதல் பலிக்கும்
தொட தொட தொட்டு விட
உயிருக்குள் உணர்த்தும்
சட சட தலும்பிட
சாத்திரம் விழிக்கும்
நடந்திட கடந்திட
யாத்திரை வரைக்கும்
தவிர்த்தல் போதுமே
சீதனம்...
உயிர்த்தல் முன்னொரு
காரணம்...
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
