நள்ளிரவு சுதந்திரம்
பாதி இரவில் மலர்ந்த
பூவுக்கு இன்று இதழ்கள்
அறுபத்து எட்டு !
புதிய விதி செய வந்த
சுதந்திர வீதிக்கு
பாதைகள் நூறு !
பாதைகள் விரிகின்றன
பயணங்கள் தொடர்கின்றன !
பலருக்கு இன்னும்
பகலும் விடியவில்லை
பயணமும் துவங்கவில்லை !
தேசீய கீதத்தின் ராகம்
என்று ஏழையின்
ஆலாபனை ஆகும் ?
~~~கல்பனா பாரதி~~~
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
