செம்மொழியே

கிழக்கடைக்க வங்கம் – நீரே
மேற்கு மறைக்க
எங்கும் பசுமைக் – காடே
தெற்கு நிறை
முக் கடல் -சங்கமம்
கலக்க எம்மெல்லை.
தெலுங்கு மலையாளம்-பண்டு
கன்னட நிகர் - துளு
தமிழிற் பிறந்ததே- எம்மொழி
என்றும் செம்மொழியே.

தமிழே எங்கள் – உயிராம்
நாற் சொற்கள்
கொண்ட நன் - மொழியே
இரு திணை
வகுத்து இம்மை - மறுமை
உணர்ந்த மொழியே
உயர் அ ஃ றினை-இருவென
பால் மூன்றெனவும்
வகுத்த தமிழே- எம்மொழி
என்றும் செம்மொழியே.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (28-Dec-15, 9:59 pm)
பார்வை : 303

மேலே