இளமை

இளமை
""""""""""
சாயங்காலம் பாட்டுவெய்யில்
புழுதிகுடித்து
கால்சட்டை
கீலே விழ இழத்துகட்டி,
தும்பி கலைச்சு
நூலில் கட்டி பறக்கவிட்டு
அதுபடும் வேதனையை
பார்த்த ரசித்து,

பற்றைமுள் முதுகில்
கோடுவரைய வலிபொறுத்து,

பந்து அடித்து கோல் போகவிடினும்
கூச்சல் இட்டு பாதையோரம்
போகும் தாவணிகலுக்கு
பகிடிவிட்டு !
முகம் சுழிக்கும் பார்வையில்
சுகம் கண்டு,
ஆறுமணி நெருங்க
அம்மா தடியோடவர!

பின்பக்கத்தாலே ஓடி
முகம் கை கால் கழவி
புத்தகத்தை எடுத்து
வாசிக்கையில்!

பாதையோரம் போன தாவணி
பக்கங்களில் கண் சிமிட்ட""""
புத்தகத்தை கட்டி அணைத்து
கனவுகளில் கரைந்து போகிறேன்!

எழுதியவர் : லவன் டென்மார்க் (29-Dec-15, 11:53 pm)
Tanglish : ilamai
பார்வை : 70

மேலே