ஆங்கில புத்தாண்டே வருக வருக

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!
-------

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!

ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!

இழப்புகளை ஏற்படுத்தாமல் ....
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!

ஈனச்செயல் புரியாமல் ....
ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!

உலகை உலுப்பாமல்....
உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!

ஊனங்களை ஏற்படுத்தாமல் ....
ஊர் செழிக்க ..வருக வருக .....!!!

எதிரிகளை தோற்றுவிக்காமல் ....
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!!

ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ....
ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!

ஐயத்தை தோற்றுவிக்காமல் ......
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஓலமிட மக்களை வைக்காமல் .....
ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!

ஔடத்தை பாவிக்காமல் .....
ஔவை வாழ்க்கை நெறிப்படி
வாழ்ந்திட ....வருக வருக ....!!!


^
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (31-Dec-15, 9:25 am)
பார்வை : 130

மேலே