புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நிலாவும் நாள்காட்டியும்
கிழிக்கப்பட்டு கொண்டேயிருந்தாலும்
மறுபடியும்
முளைக்கும்!
சூரியனுக்கும் பூமிக்கும்
வயதாகிவிட்டதை அறிய
வக்கீல் தேவையில்லை..
இலையுதிர்காலம் உண்டென்றால்
வசந்தகாலத்தின்
வருகையும் வரும்..
அந்த நம்பிக்கையில்தான்
இன்னும் சாகாமலிருக்கிறது
மனித வாழ்க்கையும் மனித நேயமும்..
அந்த வரிசையில் நானும்
அறுசுவையில் அனைவரும்...
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!