அழகுக்கு அழகு

அழகுக்கு அழகு
சிறகுகள்
அழகுதான்
வண்ணத்துபூச்சிகளது!
பறப்பதற்கும்
பயனல்லவோ!

வண்ண வண்ண
தோகையும்
அழகுதான்!
மயில்களது
இணைக்கான
தூதல்லவோ!

வெண்மை
தந்தங்கள்
அழகுதான்!
யானைகளுக்கு!
தந்தங்கள் தந்திடும்
சிலைகளும்
அழகல்லவோ!

வளைந்த
மூக்கும்
அழகுதான்!
கிளிகளுக்கு!
பழங்களின்
பதமல்லவா
புரிகிறது!

நல்ல பண்புகளும்
அழகுதான்!
மனிதனுக்கு!
பண்புகளை
பயன்படுத்தினால்
பெருமைதானே!

இதெல்லாமே
அழகுக்கு
அழகு சேர்க்கும்
அணிகலன் அல்லவா!


---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (31-Dec-15, 8:56 pm)
பார்வை : 131

மேலே