உதயமாகும் புத்தாண்டே நல் இதயத்துடன் வந்துவிடு - - - - சக்கரைவாசன்

உதயமாகும் புத்தாண்டே நல் இதயத்துடன் வந்துவிடு
*********************************************************************************************
ஓடிவரும் புத்தாண்டே உனைஎதிர்கொளும் இப்புவியில்
பஞ்சமின்றி பயிர்விளைந்து பசிப்ப்பிணி தீர்ந்துவிட
துஞ்சிஎழும் காலையில் கவலையிலா நிலை கொள்ள
தஞ்சமென வந்தோரும் அஞ்சாது வாழ்ந்திருக்க
மஞ்சம் நேர காத்தவற்கு மன்றலதும் கூடிவிட
நஞ் சொத்த தொல்லைகள் நன்கே அகன்றுவிட
அன்பும் பண்பும் உடலோடு பிறந்திட
இன்பமும் துன்பமும் ஒன்றென நினைத்திட
விண்ணதிர வான் ஆய்ந்தும் மண் நகரா திருந்திட (நிலா அதிர்வுகள் )
கலவி புகா கல்வியதும் கற்போர்க்கு கிடைத்திட
கொள்ளையடி வைத்தியங்கள் சேவையாய் மாறிவிட
திட்டங்கள் உருப்பெற்று தேசமது வளம் ஆக
சட்டங்கள் மதிப்புற்று குற்றங்கள் குறைந்துவிட
விருதுபெறும் வேளையிலும் கர்வமற்ற நிலை உற
ஆரவாரம் இல்லாத பக்திநிலை நல் பெருக
எண்ணங்கள் அழகாகி எல்லாமும் அழகாக
மறம் ஒறுத்து அறம் மதித்து அனைவரும் உலவிட
உதயமாகும் புத்தாண்டே எல்லோர்க்கும் ஆசியிடு -- உன்
ஆசிக்கு காத்திருந்தோம் ஓடோடி வந்துவிடு !!!

( எழுத்துத் தோழமைகளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் )

( வளர்க வையகம் வாழ்க வளமுடன் )

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Dec-15, 11:24 pm)
பார்வை : 94

மேலே