வேறொன்றுமில்லை -1
பிறப்பு என்பது
வேறொன்றுமில்லை
இயற்கையில் இருந்து
இறங்கி வருவது !
வாழ்க்கை என்பது
வேறொன்றுமில்லை
வருவது போவதன்
இடையினில் மகிழ்வது !
அனுபவம் என்பது
வேறொன்றுமில்லை
அதுவாய் மாறி
உணர்ந்து கொள்வது !
சிந்தனை என்பது
வேறொன்றுமில்லை
தெளிவைத் தேடி
நினைவைக் குவிப்பது !
புரிந்து கொள்வது
வேறொன்றுமில்லை
அவர்கள் பார்வையில்
நாமும் பார்ப்பது !