2016 வது புத்தாண்டே வருக

2016 வது புத்தாண்டே வருக

நிமிடங்கள் நொடிகள்
கொண்டு பயணிக்க ........

மணிகள் நிமிடம்
கொண்டு பயணிக்க ........

நாட்கள் இரவு-பகல்
கொண்டு பயணிக்க ........

வாரங்கள் நாட்கள்
கொண்டு பயணிக்க.........

மாதங்கள் வாரங்கள்
கொண்டு பயணிக்க ......

இவ்வனைத்தும் கொண்டே
பயணிக்கிறாய் ஆண்டு
எனும் அடைமொழி கொண்டு......

சூரிய குடும்பத் தோற்றம்
தேடி பயணிக்கிறது -இந்த
அறிவியல் உலகம்...............

உன்னையன்றி யாரறிவார்
எடுத்துரைக்க எவருமிலர்........

கடந்தகாலத்தை நிகழ்காலம் அறிவதில்லை
நிகழ்காலத்தை எதிர்காலம் அறிவதில்லை
இருப்பினும் உமது பயணம்
ஒருபோதும் ஓய்வதில்லை......

எதை எதை யாரரிந்தாரோ !........
எதை எதை யாராரியாரோ !!.......
அதை அதை நீயறிவாய்
என நான் அறிவேன் -தாம்
கடந்து வந்த யுகங்கல்தனில்
சில வருடங்கள் பலரால் போற்றப்பட்டதும்
பல வருடங்கள் சிலரால் தூற்றப்பட்டதும்
கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்..........

என் இதய உறவுகள் அனைத்தும்
இவ்வகிலம் முழுக்க வாழ்வதனால்
தாம் சுமந்து வந்த எழைம்பதும் பதினாறு
நாட்கள் யாவும் இனிய நாட்களென
இனிய புத்தாண்டே உம்மை
வருக !....... வருக !!......... என வரவேற்கிறேன் !!!...........

2016 வது
புத்தாண்டே வருக !......
இவ்வகிலத்திற்கு
புத்துயிர் ஒன்றை தருக !!........


*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (1-Jan-16, 12:53 am)
பார்வை : 159

மேலே