வேறொன்றுமில்லை -2

திட்டம் என்பது
வேறொன்றுமில்லை
ஆசையின் நீளத்தை
வரையறை செய்வது !

காதல் என்பது
வேறொன்றுமில்லை
இதயத்தில் இறங்கி
தொலைந்து போவது !

வெற்றி என்பது
வேறொன்றுமில்லை
தன்னை அறிந்து
முன்னே நிற்பது !

கண்ணீர் என்பது
வேறொன்றுமில்லை
தோல்வியின் சுமையை
விழிவழி கரைப்பது !

மரணம் என்பது
வேறொன்றுமில்லை
கண்ணுக்குத் தெரியாமல்
உறங்கிக் கிடப்பது !

எழுதியவர் : மதிபாலன் (1-Jan-16, 1:25 am)
பார்வை : 195

மேலே