திறக்க திறக்க சீசாக்கள்

கண்கள் தாண்டும்
கண்கள் வேர்க்கும்....
உன்னைத் தீண்டும்
இதழ்கள் பூக்கும்....
தோள்கள் ஏற்கும்
தோள்கள் நோக்கும்...
துருத்திய மார்பு கூட
வாள்கள் கோர்க்கும்...
நிலவு பாட்டி
ஒப்பனை செய்வாள்,
உன் உலவல் இரவில்
எதிர் வினைச் செயலாய்...
உளவு பார்க்கும்
ஒப்பிலாச் செயல்தான்,
உன்னை தழுவும் காற்றில்
என் வினைப் புயலாய்....
மை தீட்டும் மெல்லிய
பார்வை -எனை மீட்டும்
துல்லிய கோர்வை...
பழி தீர்க்கும் பெண்ணுடல்
போர்வை -எனை வாட்டும்
என்னுடல் வியர்வை....
மறந்திட்டேன் உண்மை- நீ
மாடப் புறாக்களின்
திண்மை....
உனை வரைந்திட்ட
என் மை கூட
கவிதையாகும் மென்மை...
பனிமலர் சிதறுகையில்
பளிங்கினால்
சில வெளிச்சங்கள்...
நெய்தல் நிலம் பதறுகையில்
இலைமறையாய்
சில இருண்மைகள்...
யாரும் அற்ற பார்வைக்குள்
பாரும் அற்ற நாம்
பனங்-கள்...
தீரும் என்றா நாம்
நினைத்தோம் -திறக்க
திறக்க சீசாக்கள்...
கவிஜி