என்னவளதிகாரம்
பெண்ணே...
நீ
ஒற்றை
முற்று புள்ளி(.)
வைத்து
முடித்த காதலை.
நான்
அதில் மேலு மிருபுள்ளி
வைத்து
மூன்று புள்ளியாய்(...)
தொடங்கினேன் கவிதையாய்...
ஒற்றை புள்ளி முடிவு.
மூன்று புள்ளி தொடரும்...
முதலில்
அவளிடம்
என்
காதலை சொல்லத்தான்
கவிதை எழுத தொடங்கினேன்...!
பின்னர்
என் கவிதையை
என் காதலி ஆக்கிக்கொண்டேன்...!!!
இவன்
பிரகாஷ்