கொஞ்சம் கொஞ்சமாக

கொஞ்சம்..
உரக்கத்தான்
பேசுங்களேன் ....
உங்களுக்கு முன்னே
கடந்து போகின்ற..
விதியின் காதுகளுக்கு
அவை கேட்கட்டுமே..!

கொஞ்சம் ..
சப்தமாகத்தான்
பாடுங்களேன்..
உங்கள் காதுகளுக்காவது
உங்களது தன்னம்பிக்கையின்
ஒலி கேட்கட்டுமே..!

கொஞ்சம்..
அக்கம் பக்கத்திலும்தான்
பாருங்களேன்..
உங்கள் விழிகளில்
ஒளியின் கீற்றுகள்
ஊடுருவட்டுமே!

கொஞ்சம்..
விரும்பித்தான்
பாருங்களேன்..
வெறுப்புகள் நெருப்பில்
முழுவதுமாய்
மறையட்டுமே!

கொஞ்சம்..
தூரம்தான்..
கடக்க வேண்டிய தூரம்..
..
கொஞ்சம்..
நேரம்தான்..
விரக்தி வெளியேறும் நேரம் ..

கொஞ்சம்..
காலம்தான்..
துயரத்தில் உழலும் காலம்!

எழுதியவர் : கருணா (2-Jan-16, 3:33 pm)
Tanglish : konjam konjamaaga
பார்வை : 514

மேலே