சில வித்தியாசங்கள்

எனது புரிதல்கள்
உன்னுடையவை போல்
இல்லாததற்கு ..
நூலிழை வித்தியாசமே
காரணமாய் இருக்கலாம் ..
..
மலைகளுக்கும் ..
பள்ளத்தாக்கிற்கும் ..
இடையில் ..
இழையளவுதான் ..
இடைவெளி ..
என்பதும் எனது
புரிதல்களில் ஒன்று ..!
..
இதிலும் ..கூட
நீ மாறுபடலாம் ..
தவறு இல்லை !

எழுதியவர் : கருணா (2-Jan-16, 3:17 pm)
Tanglish : sila VITHIYAASANGAL
பார்வை : 229

மேலே