இயக்கம்
வெகு சில ..
பேருந்துகள் ..இன்னும்
ஓடிக் கொண்டுதானிருக்கின்றன ..
மழை ஒழுகும் ஓட்டைகளோ ..
சாய்ந்து ஆடும் இருக்கைகளோ ..
எதுவும் ..
அவைகளின் ஓட்டத்தை
நிறுத்திவிடுவதில்லை ..
அவை..
செப்பனிடப் படும் வரை..
பொறுத்திருக்காமல்..
சில கடமைகளின்..
சில தேவைகளின் ..
சில அவசியங்களின்..
காரணமாக..
முடிந்தவரை முனகியபடி கூட
..
இன்னும் ..
ஓடிக் கொண்டுதானிருக்கின்றன .
அவை ..
தளர்வதில்லை..
நிற்பதுமில்லை !
.
பெரும் உந்து சக்தி
உள்ளே இருக்கும்..
வெகு சில பேருந்துகள் ..
..
வெகு சில ..
மனிதர்களைப் போல!..
..
நீங்களும் ..கூட..
அப்படித்தானே?