மாஆஆஆஆ
உன்னைப் போல்
ஈன்றெடுத்த ஒருதாயின்
இருகாம்பில் பால்
குடிக்கும் பாக்கியம்
பெறாத மகனுக்காய்
உன் மகனை ஊட்டவிட்டு
உன்முன்னே கட்டிப்போட்டு
நான்கு காம்பிலும்
கறக்கும் பாலினை
சுயநலம் கொண்டு
உந்தன் மடியிலேயே
எனக்காய் வைக்காமல்
எல்லாவற்றையும் இப்போதே
கொடுத்துவிடுமா.......ஆஆஆஆ......!
**************தஞ்சை குணா***********