தூரமென்பது துயரம்

இந்த தளத்தில்
என் நூறாவது
கவி பதிப்பதில்
மகிழ்வு
ஆதரவுக்கு
நன்றிகள்
***************************
என் இலட்சியங்கள்
இறுகிக்கிடக்கும்
வெளிகளை
தூர்வாரப்போகிறேன்
தூரம் கொள்!
மறந்துபோன
முகங்களை
மரபணுக்களில்
மூழ்கி தேடப்போகிறேன்
தூரம் கொள்!
ஞாபக பரணில்
ஞாயமற்று சிதறுண்ட
பழைய புன்னகையை
புதுப்பிக்கபோகிறேன்
தூரம்கொள்!
என் குறும்பு காடுகளில்
குருவி தேடி
இறக்கை சேர்க்க
இருக்கிறேன்
தூரம்கொள்!
ஏய் பிரியமான
பைத்தியக்காரியே
ஒரு முறையேனும்
என்னுளிருந்து _நீ
தூரம்கொள்
துயரம்தான்..
எனக்காக நான்
சுவாசிக்க
தூரம்கொள்ளேன்