அதரங்கள் தேடுது

அதரங்கள் தேடுது
பூவின் தேனாய் உள்ளது உன்னிதழ்!
பூவிழிகள் என்னை ஏனடி கொல்லுது?
காவினின் தென்றலாய் தழுவுது சுகமாய்!
கனியின் சுவையாய் இனிக்குது கன்னம்!

ஆவின் பாலாய் பொங்குது என்மனம்!
அன்பாய் நீசிரித்தால் அள்ளுது நெஞ்சம்
பாவின் பொருளாய் விளங்குது உன்மொழி
பண்ணின் இனிதாய் இருக்குதே உன்குரல்!

நாவில் உதிர்க்கும் வார்த்தைகளோ வெல்லம்!
நயன்மிகு கவிதையாகவே அது துள்ளும்!
அமிழ்தின் சுவையை அடையவே நாடுது
அன்பே, என்னிதழ்களோ உன்அதரங்கள் தேடுது!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (2-Jan-16, 8:07 pm)
பார்வை : 134

மேலே