பார்த்து சிரித்தது
லஞ்சம் கொடுத்து
பணியில் சேர்ந்தான்
பதவி: நீதிபோதனை ஆசிரியர்
பார்த்து சிரித்தது நீதி
மதத்தை போதிக்கும்
மதவாதிகள்
மதவெறி பிடித்த
மனிதர்கள்
பார்த்து சிரித்தது
மதம் பிடிக்காத யானை
ஐந்தாவது முறை
அரசுப் போட்டிதேர்வு
தலைப்பு: சுய வேலை வாய்ப்பு திட்டம்
பார்த்து சிரித்தது மனசாட்சி