கூண்டுக்குள் வாழும் குதூகலப்பறவைகள்

எங்களுக்கென்று தனித்தனி
கூண்டும் உண்டு..
அடக்கி ஆள ஆட்களும் உண்டு..
இதழின் விரிவினில் இன்பம் வளர்ப்போம்..
கண்ணீரின் கரைதனில் துன்பம் கரைப்போம்..
காவிரி நானில்லை சச்சரவாய் இருக்க
எமை காசோடு வாங்கினாலும்
கவலை தான் தீர்ப்போம்..
அன்று மேஷத்திற்கு ராகு கேது
உச்சம் என்றார்கள்..
ராகு கேது யாரென்று
தாலி கட்டி கூண்டிலிட்ட பின்புதான்
பெண் என்னிடம்
அர்த்தம் சொன்னார்கள்..
மெய்ஞானத்தை இழந்த உலகம்
விஞ்ஞானத்தில் மட்டும்
வளர்ந்து கொண்டிருக்கிறது..
அதனால்தான்
எங்கள் வார்த்தைக்கு வழி
கிடைக்காதபோது
தட்டிக்கொடுக்க ஆளில்லாத நாங்கள்..
தட்டச்சை தட்டி தட்டி
குறுந்தகவல் தோழிக்கு அனுப்பி
எங்களுக்குள்
தட்டிக்கொடுத்து வாழ்கிறோம்
இன்றுவரை குதூகலப்பறவைகளாக..

எழுதியவர் : தீபாகுமரேசன் (3-Jan-16, 5:48 pm)
பார்வை : 902

மேலே