முற்று பெறா முழுமை

முற்று பெறா முழுமை

பெண்ணின்
முழுமையே
தாய்மையாகும்!

தாய்மையின்
முழுமையே
அன்பாகும்!

அன்பின்
முழுமையே
காதலாகும்!

காதலின்
முழுமையே
காமமாகும்!

காமத்தின்
முழுமையே..
மழலைகளாகும்!

மழலைகளின்
முழுமையே
வாலிபமாகும்!

வாலிபத்தின்
முழுமையே
திருமணமாகும்!

திருமணத்தின்
முழுமையே
இணைகளாகும்!

இணைகளின்
முழுமையே
திருப்தியாகும்!

திருப்தியின்
முழுமையே..
தாய்மையாகும்!

தாய்மையின்
முழுமை,,,,,,,,,,,,,?


--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (3-Jan-16, 8:11 pm)
பார்வை : 108

மேலே