காணும் பொங்கல்
காணும் பொங்கல் காணாதது..?
********************************
உழைத்த உழைப்பிற்கு...
கார்த்திகையில் முதிர்ந்த பயிர்களை...
மார்கழியில் அறுவடை செய்த மகிழ்ச்சியில்...
தை முதல் நாள் இயற்கைக்கு இனிப்பு வழங்கி...
மறுநாள் உதவிய விலங்குகளுடன் விளையாடி...
அடுத்தநாள் ஆறு, குளங்களில் கூடி உணவருந்தி...
கொண்டாடினான் தமிழர் திருநாளாக, தமிழன்...
இன்று தேடுகிறேன் நீர்நிலையை...!
காணாமல் போனது காணும் பொங்கல்...!!
எங்கு திரும்பியும் நிலம், இருக்கிறது பெயருக்கு...!
இது நீடித்தால் என் சந்ததிகளுக்கு தமிழர் திருநாள்...
வெறும் மூன்று நாள் விடுமுறையே...!!!
இவண்
✒ க.முரளி (spark MRL K)