யாவும் யாவர்க்கும் சமம்

இகழ்வதும் புகழ்வதும்
இயல்பாயின்
புகழுக்கு ஓங்கும் - இப்பூவுலகில்
தடைகள் வருவது இயல்பனவாம் ..!

தடைகளை தகர்த்திட புறப்படவே,
தரணியில் யாவரும் செழித்திடவே,
குற்றங்கள் அனைத்தையும் களைத்திடவே
குனிந்த​ எலும்புகள் நிமிர்ந்திடவே
திறம்பட​ எழுந்து திளைத்திடுவாய்
தினம் தினம் விரைந்து ஓடிடுவாய்...!

கயமையும் செருக்கும் ஒழிந்திடவே
காரியங்கள் புரிந்திடுவாய்,
ஒப்பனை மெருகு ஏறிடவே
அகத்தினை தூய்மையாக்கிடுவாய்,
அடிமைத்தனத்தை உடைத்திடவே
அறிவாயுதம் ஒன்றை வீசிடுவாய்...!

இயங்க​ முடியா கைகளுக்கு
இயங்கிட​ கைகள் கொடுத்திடுவாய்,
யாவும் யாவர்க்கும் சமமென்று
ஓங்கி ஓங்கி உரைத்திடுவாய்...!

உரைகள் பலவென ​கற்றுத் தேர்ந்திடுவாய்,
ஊருக்கு உண்மைகள் கூறிடுவாய்,
இவை யாவும் சொன்னது நீயாகும்,
ஆக​ நீயும் நல்வழி நடந்திடுவாய்.

நாளை என்ற​ நிலை வேண்டாம்
நீ இயங்கும் நாளே புத்தாண்டு
எனவே
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இங்கணம்
செல்ல.கார்த்திக்

எழுதியவர் : செல்ல.கார்த்திக் (4-Jan-16, 9:37 am)
பார்வை : 138

மேலே