மலரே

மொட்டரும்பி
முகையவிழ்ந்து
மோகன
சிகை கமழ்ந்து
கட்டவிழா
கலையாகி
கார் குழலின்
அழகாகி
சாமிக்கு மாலையாகி
சவமோடு நிழலாகி
பூமிக்கு சுகந்தமாகி
புன்னகைத்த பூவே !
பனித்துளிகளோடு
உறவாடி
சிலுசிலுப்பாய்
தென்றலோடு
உறவாடி
பூங்காற்றாகுவாய்
வண்டோடு
உறவாடி தேன்
கிண்ணமாகுவாய்
ஒரு நாள் ஆயுளோடு
மாலை மறைவாய்
எனினும் காலை
மலர்வாய் மகிழ்வாய் .
பூவையே !
நீ
புலர்ந்தெழுவாய்
பூவை நினைந்தெழுவாய்
வாடுதல் நிகழ்ந்திடினும்
வாடுதா பூவினம்
வாடாதே !
வளர்த்திடு
வாசமாய் நிறைந்திடு !
- பிரியத்தமிழ் -