புத்தகப் புத்தன்

* * * * * * * * * * *
வேட்டுக்களால்
துளைக்கப்பட்ட இதயம்
துடிதுடித்து இறப்பது போல
அந்த
கல்லூரி பின் முற்றத்தில்
காற்றில் இறக்கையடித்து
துடி துடிக்கிறது
புத்தகம் ஒன்று !

ஒரு
குழந்தையை
அள்ளியெடுத்து
அணைப்பது போல
தூக்கி
மார்பணைத்து
விழிகளை ஒற்றி ஒற்றி
முத்தமிட்டேன் !

தரையில்
தத்தெடுத்த
வான் பறவை அது
என்னை மறக்கச் செய்த
தத்துவ இளையோடிய
ஞானப்பறவை
என்னைப் படி
என்றது !

காற்று அதை
அணைக்க மறுத்தது
அதன்
சிறகுகள்
என்னை பறக்க விட்டன
தான்
என்னுள்
குந்திக் கொண்டு. ...!
நீ
அமைதி
கொள்வதன்
அர்த்தம் என்ன - என
வினவிக் கொண்டு. .....!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (4-Jan-16, 10:06 am)
Tanglish : putthagap butthan
பார்வை : 178

மேலே