நாடகத்தின் பாத்திரத்தில்
* * * * * * * * * * * * * * * * * *
செம்மாந்து திரியும்
அந்த
சிட்டுக்குருவிக்கு
வானத்தின்
ஆதியும் அந்தமும்
அலுத்துப் போய் விட்டது
இப்போதெல்லாம்
நிலத்தின்
பெருமூச்சுக்கு
சிறகுலர்த்தி சிரிக்கிறது
வேடனின்
அம்புக்கும் வில்லுக்கும்
இது
அகப்படாத விட்டில் பூச்சி
ஆகாய அகழிகளின்
சிறிய பருக்கைகளாக
தன்னைக்
கொத்திச் செல்லும்
லாவகம்
யாருமே அறியாதது
கதவுகள் இல்லாத
அதன்
மாளிகையில்
சூரியனின்
கதிர்வீச்சுக்கள் கூட
பட
எத்தனிப்பதில்லை
ஒற்றை இறகால்
வானைப் பிடித்து
அளந்து வருவதற்கும்
சுழற்றித்
தரை எறிவதற்கும்
இலகுவாய் முடியும்
அதனால்
ஆனால் அது
புதுயுகம் கீறும்
பொன் வண்டு
காரிருள்
கலைக்கும்
மின் மினி
கடலையே
எதிர்த்துப் பறக்கும்
வல்லூறு
இந்த
மனிதனிடம்
மனித நாடகத்தில்
எப்படியாவது
பங்கெடுத்தாக
வேண்டும்
என்பதில் கூட
அச்சமில்லாத
குதூகலத்தோடு
அது
ஒரு சிட்டுக்குருவியாகவே
இருந்தால். ...
- பிரியத்தமிழ் -