ஆர்,ஈவார் எனக்கு நிவாரணம்

கோப்பையில் மதுவும் உண்டு
குடித்தநின் நினைவும் உண்டு!
மூப்பிலாத் தமிழும் உண்டு
முடிவிலாத் துயரும் உண்டு!
தோப்பிலே குயிலும் உண்டு!
துணைக்கதன் இசையும் உண்டு!
காப்பிலா அரசும் உண்டு
கண்ணீருக்கு அணைதான் உண்டொ?

முகவரி உனக்குள் தேடி
மூளையைத் தொலைத்து விட்டேன்!
தகவலை மறுத்தோர் தந்த
'தண்ணீரில்' மூழ்கி நிற்பேன்!
அகவரி எழுத்தில் போட்டால்
அதையினிப் படிப்பா ரில்லை!
சுக,நிவா ரணமாம் நீயோ
சோகமாம் இரணமேன் தந்தாய்?

வழியென நான்,இ ருந்தேன்!
வந்த,நின் தடமாய்ச் சோகம்!
பழிதரும் மதுவை உந்தன்
பார்த்திடாக் கண்கள் அன்றோ
வழியெனக் காட்டிப் போன!
வாழ்வதன் சுழலில் மூழ்கும்!
இழிவுடன் நிற்பேன் இன்று!ஆர்
என்,நிவா ரணத்தை ஈவார்?

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (5-Jan-16, 8:53 am)
பார்வை : 76

மேலே