சுகமான சுமை

தேர்வும் நீயும்
ஒன்று தானடி
எவ்வளவு படித்தாலும்
புரிவதே இல்லை....

தேர்தல் வாக்குறுதியும்
நீயும் ஒன்று தானடி
சொல்வதோடு சரி
எண்ணத்தை நிறைவேற்றுவதே இல்லை....

நியாய விலை கடையின்
கலப்படத்தின்
நியாயம் நீ....
என்னில் பாதி என்றேன்
உனை...
மீதி பாதியையும் தா என்கிறாய்...

என் தங்கமே
எங்கே நீ?
என்றழைத்தேன்...
என் அங்கத்தின்
தங்கம் எங்கே?
என்று வினவுகிறாய் ....

பொருட்காட்சிக்கு போகலாம்
வாங்கள்...
பொருட்காட்சிக்கு போகலாம்
வாங்க அல்ல ...
தாங்க...

என்னங்க காப்பி போட்டு
கொண்டாரன் ...

என்ன ஒரு கரிசனம்!

தோ வந்துட்டன்.என்னமோ முணுமுணுத்திட்ருந்திங்களே என்னது...

ஒன்னும் இல்ல...

பக்கத்து வீட்டு
பொம்பள
பட்டு சேல
கட்டிருக்காங்க...
நீங்களும்
எனக்கு ஒரு
பட்டு சேல
வாங்கித்தாங்க...

அதானங்க அத்தான்
உங்களுக்கு
மருவாதி...

என் பட்டே!
உனக்கே ஒரு பட்டா?

போங்க
வாங்கி தர
மனசு இல்லனா
நேரா சொல்ல
வேண்டியது தானே...
ஏன் சுத்தி வளைக்கறீங்க...

அதுக்கு இல்லடி செல்லம்!...

வாங்கி தர
வக்கு இல்லனாலும்
இதுக்கு
ஒன்னும்
கொறச்சல் இல்ல....

சில மணித்துளிகளின்
அமைதிகளுக்கு பிறகு

அடுப்படியில் என்னவள்...

நடிக்கிறேன்
நெஞ்சு வலிப்பது போல்
சோஃபா வில் சாய்ந்து...
பதறிக் கொண்டும்
கதறிக் கொண்டும்...
ஓடி வருகிறாள்...
மடிதனில்
எனை வாங்கிக் கொள்ளவும்...
தாங்கிக் கொள்ளவும்...

நிஜமாகவே நெஞ்சு
வலிக்கக் கூடாதா இப்பொழுது...

(அல்லது)

நெசமாவே நெஞ்சு
வலிக்குது ...
இப்ப...
உன்ன போய்
ஏமாத்த நெனச்சனே...

எப்பயுமே(எப்பொழுதும்)
நீ எந்தன்
தேர்வு தாள் தானடி.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jan-16, 10:47 am)
Tanglish : sugamaana sumai
பார்வை : 100

மேலே