மீள் செயல்கள்
மெல்ல செய்யும் செல்லக்குறும்புகள்
உடனுக்குடன் கொள்ளும் சிறுகோபங்கள்
சொல்லுக்கடங்கா செயல்கள்
மல்லுக்கு நிற்கும் மடமைகள்
அழுது செய்யும் ஆர்பார்ட்டாங்கள்
அங்கங்கே சில அர்ப்பணிப்புகள்
தேவையறிந்து நடக்கும் தன்மைகள்
ஆசையுடன் பேசும் அன்புவார்த்தைகள்
நான் காணும் மீள் செயல்கள்
இன்று என் மகளிடம்
- செல்வா