ஏழ்மையில் கற்கை
சிறு இல்லத்தில் பல இன்னல்கள்-இவன்
உள்ளத்தில் ஒரே உந்துதல்தான் ஏனோ ?
எத்தனை எத்தனை இறைவன் –இவன்
இல்லத்தின் மூலையில் முடங்கியது ஏனோ ?
படிக்காதவன் பகலுக்கு பகலவன் –இவன்
படிப்பதற்க்கு இரவில் உதிக்காதது ஏனோ ?
வானொலியும் காணொளியும் சிந்தைவிலக்கும்
வேளையிலே இவன் பாடம்படிக்க பரிதவித்தது ஏனோ ?
எள்ளினகையாட எவருமில்லா நேரத்திலே
நள்ளிரவில் தெருவிளக்கை தேடிபோனதேனோ ?
ஆந்தை மட்டும் இங்கு அலறுவதேனோ இக்கனம்
இவனிதயம் நடுநிசியில் நடுங்குவதேனோ ?
ஒருகையில் பாடநூல் விழிகளுக்கு சிந்தையிலோ
நேற்று இவ்வழி கடந்து போன பாடைபோல் தானோ ?
நள்ளிரவில் அவட்டை ஒன்றும் அலைகிறதாம்
அதன் கரத்தில் எழுதுகோல் ஒன்றை அறிவாரோ ?
நிழலும் நானும் குறுக்குமருக்காய் நடந்தவாறே
படித்து முடித்ததும் எதுவோ படபடக்கும் மனதோடே ?
சலனமில்லா இரவினிலே சற்றும் ஒலி காணலியே
இதயத்துடிப்பை அறிகின்றேன் நூலில் அதனை படித்தவாறே !
விடிந்து போனதை கூறிவிட்டு எழுந்து வந்த சேவளிடம்
இரவில்பகல் கொடுத்த இறைவன் எடிசன் என அறிவாயோ
எந்தன் படிப்பின் அருமை புரிவாயோ என்று கிளம்பிவிட்டேன் பள்ளிக்கு !!!
*****************தஞ்சை குணா*************