குரு

பெரிதாக
வளர்ந்து விட்ட
ஈசல் புற்றுப் போலத்தான்
இருந்தது அந்தக் குன்று..
ஆடுகள் மேயும்
புல்வெளியிடையில்
மெலிதான புகை எழும்புவதாகச்
சொன்ன அந்த ஆட்டிடயனை
இகழ்வாக பார்த்த மனிதர்கள் ...
வானம் நோக்கி
அக்கினிக் குழம்பை
உமிழத் தொடங்கிய போதுதான்
புரிந்து கொள்ளத் தொடங்கினர்
எரிமலையென்று...
இப்போது
ஆட்டிடையன்
அம்மனிதர்க்கு
குருவானான்…
கடவுளுமும் ஆனான்..