சுட்டிப் பென்சில்

கிறுக்கல்கள்
சொல்லிக்கொண்டிருக்கிறது
அது வீடு
*
வளைந்த கோடுகளில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது
நேரான மகிழ்ச்சி
*
ஒரே கோட்டில்
இணைந்தது
அப்பா அம்மா
அண்ணனோடு அன்பு
*
விட்டுப்போன நிறங்களை
நிறப்பிக் கொண்டிருகிறது
சிரிப்பு
*
நிறம்பிக் கொண்டிருக்கும்
பென்சில் கோடுகளில்
கூடிக் கொண்டிருக்கிறது
ஆயுள்
*
காலியான வாளி
பாப்பாவின்
கன்னங்களை நிறப்புகிறது
*

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (6-Jan-16, 11:57 am)
பார்வை : 280

மேலே