தாய்,தாரம்,பிள்ளை

உன் கருவறையில்
நான் இருந்ததால் என்
உயிர் உள்ள வரை
நீ மட்டுமே என் மனதில்
இருப்பாய் அம்மா..
என் மணவறையில்
உன்னை நான் கரம்
பிடித்ததால்...நீ
மட்டும்மே நான்
மண்ணறை செல்லும் வரை
என்னுள் நீ இருப்பாய்.. மனைவி..
புவியறையில் எனக்கு
நீ பிள்ளையாய் பிறந்ததால்
என் மண்ணறை வரை நீ
மட்டும் வருவாய் என
நம்புகிறேன்.மகனே....