முயற்சி
தத்தி தத்தி நடந்தேன்...
பலமுறை.....
விழுந்ததால் இன்று நடக்கிறேன்.....
பல நாள் முயற்சி செய்ததால்...
நாவசைத்து தத்தி தத்தி பேசினேன் பல நாள்...
திக்கியதால் இன்று தித்தித்து இனிக்கிறது என் சொல்...
பல நாள் முயற்சி செய்ததால்... கோணல் மாணலாய் கிறுக்கினேன் என் எழுத்துகளை...
கிறுக்கியதால் இன்று வடிவம் பெற்றேன்...
பல நாள் முயற்சி செய்ததால்..
இந்த நொடி எனக்கு புரிந்தது..
எந்த வெற்றியும் முயற்சிக்காமல் இல்லையென்று..
எந்த தோல்வி வந்தாலும்...
முயன்று பார்ப்போம்....
அடுத்த நொடி நாம் வென்றிட....