ஆதலால் சூதானம்

எழுத்து
தவறினால்
பேசும் வார்த்தை
அனர்த்தமாகலாம்...
நண்பன் திரைப்படம் போல்
ஆதலால் சூதானம்...

பேசும் வார்த்தை
தவறினால்
வாழ்க்கை
திசைமாறலாம்
யாகாவாராயினும் நா காக்க திரைப்படம் போல்
ஆதலால் சூதானம்...

நிதானம்
தவறினால்
வாழ்க்கை நரகமாகலாம்
குற்றம் கடிதல் திரைப்படம் போல்
ஆதலால் சூதானம்...

விதிகளை
தவறினால்
வாழ்க்கை தொலையலாம்
எங்கேயும் எப்போதும்
திரைப்படம் போல்
ஆதலால் சூதானம்...

நேர்மையை
தவறினால்
தண்டனை பெறலாம்
இந்தியன் திரைப்படம் போல்
ஆதலால் சூதானம்...

மனசாட்சி
ஆட்சியில்
மனவேதனை இன்றி வாழ்ந்திடுங்கள்...
வாழும் வாழ்க்கைக்கு
உண்மையாய் வாழ்ந்து
வையத்தை வாழவைப்போம்.....
பசுமைகளோடு ......

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Jan-16, 7:06 am)
பார்வை : 94

மேலே